நரிக்குடி அருகே வடமாடு மஞ்சு விரட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நடந்த வடமாடு ஜல்லிக்கட்டில் ஒரு மாட்டை அடக்க 25 நிமிடம் கால அவகாசம் வழங்கப்பட்டது
நரிக்குடி அருகே அம்மன் பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே அம்மன்பட்டியில், காளியம்மன் கோயில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிலம்பாட்டம், கரக ஆட்டம், முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. வடமாடு மஞ்சு விரட்டுக்கு 14 காளைகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டன. சிவகங்கை, மேலூர், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஊர்களிலிருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
ஒரு மாடுபிடிப்பதற்கு 25 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. களத்தில்அசூர வேகத்தில் சிறி வந்த காளைகள் மாடுபிடி வீரர்கள். போராடி லாவகமாக பிடித்தனர் .சிறந்த காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது. விழாவில், ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மனோகரன், கூடுதல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், டி.எஸ்.பி.க்கள் சகாயஜோஸ், மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.