காரியாபட்டி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் மரணம்
காரியாபட்டி அருகே தனியார் அப்பள கம்பெனியில் மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்;
காரியாபட்டி அருகே தனியார் அப்பள கம்பெனியில் மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு சூரம்பட்டி பகுதியில் தனியார் அப்பள கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில், அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (30). என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயந்திரம் இயங்கும் பணியை செய்து வருகிறார்.
சூரம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி, டி.கடமன்குளத்தை சேர்ந்த இராஜா மற்றும் முடியனூரை சேர்ந்த முருகன் ஆகியோர் தனியார் அப்பள கம்பெனியில் ஹீட்டர் மெஷின் பொருத்தும் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இராஜா, அலுமினியத்தால் ஆன ஏணியை எடுத்துக் கொண்டு செல்லும்போது மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயர் ராஜா மீது உரசியதால் , மின்சாரம் பாய்ந்து ராஜா தூக்கி எறியப்பட்டார்.
அவரைக் காப்பாற்ற சென்ற பழனிச்சாமி என்பவர் மீதும் மின்சாரம் தாக்கியதில், இரண்டு தொழிலாளர்களும் படுகாயம் அடைந்து மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இரண்டு தொழிலாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
உடலைக் கைப்பற்றிய மல்லாங்கிணறு போலீஸார் உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தனியார் அப்பளம் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.