அருப்புக்கோட்டை அருகே ரேசன் கடையை திறந்து வைத்த அமைச்சர்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 10 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்
அருப்புக்கோட்டை பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், ரேசன் கடை கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி மைதானம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில், சுமார் 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
மேலும் சொக்கலிங்கபுரம், ஜவகர் சங்கத்தெரு பகுதியில், 12 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டிருந்த ரேசன் கடை கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவுத்துறை மற்றும் நகராட்சித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.