அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி வைத்தார்
அருப்புக்கோட்டையில் நடமாடும் காய்கறிகள் விற்பனை சேவையை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.;
அருப்புக்கோட்டையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக காய்கறிகள் விற்பணை செய்யும் நடமாடும் காய்கறிகள் விற்பனை சேவையை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது அருப்புக்கோட்டையில் ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு சிரமமின்றி நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்கள் மூலமாக சரியான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யவேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இன்று அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 36 வார்டுகளுக்கும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனத்தை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.
தோட்டக்கலைத்துறை உதவியுடன் நேரடியாகவும் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவும் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த வாகனங்களில் அனைத்து காய்கறிகளின் விலைப்பட்டியலும் ஒட்டப்பட்டுள்ளது இதேபோல் கூட்டுறவுத்துறை மூலமாகவும் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது