கிராமங்களில் திமுக சார்பில் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி: மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
Stalin's Vocal Performance காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களி்ல் இல்லங்கள் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி நடந்தது.
Stalin's Vocal Performance
விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி பகுதியில், இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.
தமிழக அரசின் இரண்டரை ஆண்டு செய்து முடிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் 2024 ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் பற்றி பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த உத்தரவு பிறப்பித்து ள்ளார்.
விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின். ஆலோசனையின் பேரில், மல்லாங்கிணறில் நடந்த வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காரியாபட்டி அருகே - தொட்டியங்குளம், நெடுங்குளம் கிராமங்களில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சி துவங்கப்பட்டது. காரியாபட்டி மாவட்ட க்கவுன்சிலர் தங்க தமிழ் வாணன் தலைமையில் நிர்வாகிகள் இல்லங்களுக்கு சென்று பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
அப்போது, ஊராட்சிகளில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கட்சி நிர்வாகிகள் தங்கராசு, செல்லம், கார்த்தி முருகேசன் வெங்கடேசன் . முருகன். கந்தசாமி , மனோகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.