காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

கல்லூரியில், கணிதத்துறை சார்பாக கணித மேதை ராமானுஜம் நினைவாக இரண்டு நாள் கணித கருத்தரங்கு நடத்தப்பட்டது.;

Update: 2023-12-27 09:15 GMT

விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரி நடைபெற்ற கருத்தரங்கம்.

காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்:

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில், கணிதத்துறை சார்பாக கணித மேதை ராமானுஜம் அவர்களின் நினைவாக இரண்டு நாள் கணித கருத்தரங்கு நடத்தப்பட்டது. கருத்தரங்குக்கு, கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். முகமது ஜலில், தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ் .எம். சீனி மொஹய்தீன், எஸ் எம். சீனி முகமது அலி யார், எஸ்.எம் .நிலோபர் பாத்திமா, எஸ்.எம். நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர் .

முதல்வர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் மற்றும் ஆலோசகர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்கில், ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்த தொகுப்பு மலரை, கல்லூரி தலைவர் எஸ்.முகமது ஜலில் வெளியிட, பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார். இந்த கருத்தரங்கில், 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில், சிறப்பு பேச்சாளராக சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆராய்ச்சி நெறியாளர் பேராசிரியர் சுவாமிநாதன், காந்திகிராம் பல்கலைக்கழகம் கணிதத்துறை பேராசிரியர் மகாதேவன் , நாகர்கோவில் ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் இளங்கோ, எஸ் .எஸ். என் .பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுந்தரேஸ்வரர் மற்றும் மற்றும் பரமக்குடி அரசு மகளிர் கலை கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியர் பக்தவச்சலம் கலந்து கொண்டு தங்களது உரையை நிகழ்த்தினார்.

இதில், கர்நாடகா சென்னை மற்றும் ஓமன் போன்ற நகரங்களில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் நேரலையாகவும் மற்றும் வலைதளத்தின் மூலமாகவும் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிகழ்வை, கணிதத்துறை தலைவர் லட்சுமணராஜ் பேராசிரியர்கள் லட்சுமி நாராயணன் சையத் இப்ராஹிம் கவிதா காயத்ரி மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News