காரியாபட்டியில் சமுதாயத் திறன் பள்ளி திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், சமுதாய திறன் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2021-12-03 07:15 GMT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், சமுதாயத்திறன் பள்ளி திறப்பு விழா நடந்தது.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி - ஊராட்சி துறை மற்றும் ஊரக புத்தாக்க திட்டம் சார்பாக,  காரியாபட்டி கல்குறிச்சியில் சமுதாய திறன் பள்ளி திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார், திறன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் மகேந்திரவர்மன் புனிதா (தொழில்) வட்ட அணித் தலைவர் அம்சவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News