விருதுநகர் அருகே சூரனூர் சிவன் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2021-11-28 07:30 GMT

காரியாபட்டி அருகே சூரனூர் சிவன்கோயிலில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, காரியாபட்டி சூரனூர் சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சிவக்குமார், பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில் அர்ச்சகர் செல்லமணி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், பசுமை பாரதம் அறக்கட்டளை நிர்வாகி பொன்ராம், தலைமை ஆசிரியர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமலிங்கம், ஆத்மா குழு தலைவர் கந்தசாமி, உலக்குடி ராமச்சந்திரன், ஆவியூர் சுப்பிரமணி, பிச்சை, சக்திவேல், வீரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News