அருப்புக்கோட்டை அருகே ரூ.1,800 போதைப் பொருள்கள் அழிப்பு
சுங்கத்துறை சார்பாக கைப்பற்றப்பட்ட 1800 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் காரியாபட்டி அருகே மருத்துவ கழிவு எரியூட்டும் மையத்தில் அழிக்கப்பட்டது.
இந்திய அரசு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. அதன் படி, 75. நாட்கள் தொடர்ந்து அனைத்து அரசு துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக நேற்றைய தினம் போதை பொருள் ஒழிப்புதினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி மண்டல சுங்கத்துறை சார்பாக கைப்பற்றப்பட்ட 1800 கோடி மதிப்பிலான போதைபொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரியாபட்டி அருகே உள்ள தனியார் மருத்துவ கழிவு எரிப்பு ஆலையில் எரித்து அழிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சுங்கத்துறை முதன்மை ஆணையாளர் உமாசங்கர் பங்கேற்று பேசுகையில், இந்திய அரசாங்கம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு துறையின் மூலம் கொண்டாடி வருகிறது.
இதில் 6 முதல் 12 வாரம் வரை மத்திய நிதியமைச்சகமும் - வர்த்தகத்துறையும் கொண்டாடி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, போதை பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பிடிப்பட்ட போதை பொருள் 42 ஆயிரம் கிலோ ஆங்காங்கே அழிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி சுங்கத்துறை மூலம் பிடிக்கப்பட்ட போதை பொருள்களை இதுவரை இல்லாத அளவு பிடிபட்ட 330 கிலோ கொகைன் போதை பொருள்களை ரூபாய் 1800 கோடி மேலும் 200 கோடி மதிப்பிலான போதைபொருள்களை நரிக்குடி அருகே உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் உள்ள மருத்துவ கழிவு ஆலையில் வைத்து அழிக்கப்பட்டது.
இந்த போதை பொருள் அழிப்பு நிகழ்ச்சியை, கானொளி காட்சி மூலம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார்.