அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சேவை: சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி

விதிகளை மீறியது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்;

Update: 2023-04-27 07:30 GMT

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அருப்புக்கோட்டையில், உள்ள அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது , செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி வருவாய்த்துறை அமைச்சரின் தீவிர முயற்சியினால், பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஏற்கெனவே இருந்த அரசு மருத்துவமனைகள் இன்றைக்கு அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் அல்லது அரசு மருத்துவமனைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

வருவாய்த்துறை அமைச்சருடைய வேண்டுகோளை, தமிழகம் முதல்வர் ஏற்றுக்கொண்டு, மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை என்ற நிலை இருந்ததை மாற்றியுள்ளார். தமிழக அரசு மருத்துவமனைகளில், தரமான மருத்துவ சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.மருத்துவமனைகள், மக்கள் வசதிக்காக தரம் உயர்த்தப்பட்டு, நல்ல சிகிச்சை அளிக்கிறோம் என்றார், அமைச்சர் மா. சுப்ரமணியம்.

Tags:    

Similar News