காரியாபட்டியில் கோயில் பொங்கல் விழா

காரியாபட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2022-06-08 10:15 GMT

திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது

காரியாபட்டி  மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடந்தவிழாவில் , அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன .முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது . விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை,  காவல் உதவி ஆய்வாளர்  பா. அசோக்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News