விருதுநகர் மாவட்ட பாஜக தலைவருக்கு காரியாபட்டியில் கட்சியினர் வரவேற்பு
திருச்சுழி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்;
விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவருக்கு காரியாபட்டியில் அக்கட்சியினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்ட பாண்டுரங்கன் திருச்சுழி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
காரியாபட்டி பஸ்நிலையம் அருகே பசும்பொன் தேவர் மற்றும் மருதுபாண்டியர் கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில், ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்டத்தலைவர் பாண்டுரங்கன் வழங்கினார். நரிக்குடி மறையூரில் மருதுபாண்டியர் சிலை, செம்பட்டியில் முத்தரையர் உருவச்சிலைக்கு மரியாதை செய்தார். மாநில பொதுச்செயலாளர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொதுச் செயலாளர் பழனி, தலைவர் சித்தாராமன், விஜயரகுநாதன், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.