காரியாபட்டியில் நரிக்குறவ மாணவர்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்க வாய்ப்பு
மாணவர்களை பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார்;
காரியாபட்டியில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு
காரியாபட்டி நரிக்குறவர் மாணவர்களை உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நரிக்குறவ மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் நரிக்குறவர்கள் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து குடியிருந்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியதால், பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதற்கான பணிகளும் துவங்கப்பட்டுள்ளது. நரிக்குறவ மாணவர்கள் ஆரம்ப கல்விக்காக காரியாபட்டி, சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்து தங்கி படிப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார் . மாணவர்களை பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார்.