விருதுநகர் அருகே குடிநீர் திட்டப்பணிகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆய்வு

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்

Update: 2023-10-21 07:45 GMT

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அருப்புக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராமச்சந்திரன் தலைமையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் முன்னிலையில், அரசு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக முதல்வர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை பேரூராட்சிகளுக்கு ரூ.444 கோடியில் சீவலப்பேரியில் இருந்து புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சீவலப்பேரியில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் குழாய்கள் பதிக்கப்பட்டு தாமிரபரணிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கான பைப்லைன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குழாய் பதிக்கும் பணியின் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன், பணிகளை விரைவுபடுத்தி, சீரான மின்சாரத்தை உறுதி செய்ய தேவையான மின் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்

குழாய் பதிக்கும் இடங்களில் சப்ளை செய்ய வேண்டும். மேலும், பைப் லைன் அமைப்பதற்காக ரோடுகளில் தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலைகளை சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இந்த புதிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார் 

இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், செயற்பொறியாளர், நகராட்சி மண்டல இணை இயக்குனர், ஆணையர்கள், விருதுநகர், சாத்தூர் நகராட்சி தலைவர்கள், உதவி பொறியாளர்கள், நெடுஞ்சாலை மற்றும்  மின்சாரத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News