புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி முன்னிலை வகித்தார் புதிய கட்டிடங்களை அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்துவைத்தார்

Update: 2022-05-15 08:30 GMT

நரிக்குடி ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட    புதிய கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

நரிக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட  அரசு கட்டிடங்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், பிள்ளையார் நத்தத்தில் ,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய கலையரங்கம், புல்வாய்க்கரையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ,எஸ். வல்லக் குளத்தில் பயணியர் நிழற்குடை, இனக்கனேரியில் புதிய கலையரங்கம். சினிமடையில் சமுதாயக்கூடம் ('எம்.பி நிதி) ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.

அதன் திறப்பு விழாவுக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி முன்னிலை வகித்தார் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து  அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: தேர்தலின்போது ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்கள் பலவேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றை எல்லாம் நாம் நிச்சயமாக நிறைவேற்றி தருவோம் என்று சொன்னோம் . அதே போல , புல்வாய்க்கரையில் வாக்கு சேகரிக்க நான் வந்தபோது எங்கள் ஊருக்கு கலையரங்கம் வேண்டும் கோரிக்கை வைத்தார்கள்.

இன்று மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிகொடுத்துள்ளோம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் வாங்கப்பட்ட மனுக்கள் மீது இன்று உங்கள் தொகுதி முதலமைச்சர் என்ற திட்டத்தில். பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. திருச்சுழி தொகுதி முன்னேற்றம் பெறுவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது  என்றார் அமைச்சர் தென்னரசு..

ஒன்றியச்செயலாளர்கள் கண்ணன், போஸ். மாவட்டக் கவுன்சிலர் கமலி பாரதி, ஒன்றிய கவுன்சிலர்கள் காளீஸ்வரி. புல்வாய்க்கரை ஊராட்சி மன்றத் தலைவர் யுவராணி கார்த்திகேயன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News