காரியாபட்டி அருகே மழையால் பாதித்த நரிக்குறவரினமக்ககளுக்கு அமைச்சர் ஆறுதல்

Update: 2021-11-06 05:15 GMT

நரிக்குறவ மக்களை பார்வையிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில்,  நரிக்குறவர்கள் குடியிருக்கும் காலனி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களை பத்திரமாக மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்து தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், நரிக்குறவர் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,   நரிக்குறவர் காலனிக்கு வருகை தந்து ,பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், காலனி மக்களக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். காரியாபட்டி ஒன்றியச் செயலாளர்கள் செல்லம், கண்ணன் நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News