விருதுநகரில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு இடமாற்ற ஆணை வழங்கிய அமைச்சர்

வெடிவிபத்தில் தாயை இழந்த செவிலியர் பயிற்சி மாணவிக்கு விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் பயில்வதற்கான இடமாற்றஆணை வழங்கினார்;

Update: 2023-11-10 09:00 GMT

வெடி விபத்தில் தாயை இழந்த செவிலியர் பயிற்சி மாணவிக்கு விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கான இடமாற்ற ஆணையினை . நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், அழகாபுரி கிராமத்தை சேர்ந்த வெடி விபத்தில் தாயை இழந்த எஸ்.அபிநயா என்பவருக்கு, 2023 - 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஈரோடு பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைக்கப் பெற்றது.  மாணவியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பு நேர்வாக கருதி, அரசு அனுமதி பெற்று கிடைக்கப்பெற்ற,  விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் சேருவதற்கான இடமாற்றம் ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: வத்திராயிருப்பு வட்டம், அழகாபுரி கிராமத்தை சேர்ந்த ஏற்கனவே தந்தையை இழந்து, 17.10.2023 அன்று நடந்த வெடி விபத்தில் தாயையும் இழந்த செல்வி எஸ்.அபிநயா என்பவரின் கோரிக்கையினை பரிசீலனை செய்து, 2023 - 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஈரோடு பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைக்கப் பெற்ற நிலையில், மாணவியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பு நேர்வாக கருதி, அரசு அனுமதி பெற்று விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் சேருவதற்கான இடமாற்றம் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் தங்கம்தென்னரசு.

Tags:    

Similar News