காரியாபட்டி பேரூராட்சியில் சிறப்பு துப்புரவு பணி முகாம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில், துப்பரவு பணி முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவல் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற முகாமினை, பேருராட்சித்தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில், துணைத் தலைவர் சந்தோசம், சப் இன்ஸ்பெக்டர் பா.அசோக் குமார் ,மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.