காரியாபட்டியில் மருது பாண்டியர் குருபூஜை விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மருதுபாண்டியர்கள் ஜெயந்தி விழா நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மருதுபாண்டியர்கள் குரு பூஜை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் , தி.மு.க. அ.தி.மு.க . மதிமுக பா.ஜ.க புதிய தமிழகம், தமிழ் புலிகள் கட்சிசார்பாக மருதுபாண்டியர்கள் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
திமுக சார்பாக பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், ஒன்றிய துணை செயலாளர் குருசாமி பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, ஒன்றிய கவுன்சிலர் சேகர், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் வாலை.முத்துச்சாமி சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியன். சங்கரேஸ்வரன் அதிமுக சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள் கவுன்சிலர் திருச்செல்வம், ஆவியூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி. தோப்பூர் ரகு, ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க சார்பாக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நிர்வாகிகள் ராமலிங்கம் பாலமுருகன், வழக்கறிஞர் மதிமுக சார்பாக மாவட்ட துணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய செயலாளர் முனியாண்டி, துணைசெயலாளர் முத்துமாரி பொதுக்குழு உறுப்பினர் அமிர்தராஜ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் இனியவன், துணைசெயலாளர் பாக்கியராஜ் பொருளாளர் முத்துமணி நகர செயலாளர் இளந்தமிழன், புதிய தமிழகம் ஒன்றிய, செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெகன், தமிழ் புலிகள் சார்பாக முல்லை வேந்தன், மருது சேனை மாவட்ட செயலாளர் சரவணன் முக்குலத்தோர் உறவின்முறை நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன் மருதுபாண்டியன் அர்ச்சுணன் தேவரின கூட்டமைப்பு அமைப்பாளர் அழகர்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.