காரியாபட்டி அருகே, உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா..!

காரியாபட்டி அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2024-03-05 14:03 GMT

காரியாபட்டி அருகே உண்டு உறைவிடப் பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்களின் நடனம்.

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் சார்பில் ,நரிக்குடி அ.முக்குளத்தில் இயங்கி வரும்  கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா சுரபி உண்டு உறைவிடப்பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. விழாவுக்கு, முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார்.

சுரபி நிறுவன தலைவர் விக்டர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மகாதேவி வரவேற்றார். நரிக்குடி ஒன்றியக் குழு,த் தலைவர் காளீஸ்வரி, சமய வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், மாணவிகள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சி, யோகா, சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றது . நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் தங்கப் பாண்டியன், அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தனசீலி , வட்டாரக் கல்வி அலுவலர்கள் ரகுநாதன், அலமேலு அம்மாள், ஆசிரியர் பயிற்றுநர் ராஜசேகர், சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் , கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை, ஆசிரியர் பானுபிரியா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ரேவதி நன்றி கூறினார்.

மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் சிலம்பாட்டம் மற்றும் யோகா போன்ற நிகழ்ச்சிகள் பலரையும் கவர்ந்தது. 

Tags:    

Similar News