காரியாபட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

Kariyapatti Town Panchayat Child Protection Advisory Meeting

Update: 2022-07-01 09:15 GMT

காரியாபட்டி பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக்கூட்டம் பேரூராட்சித்தலைவர்  செந்தில் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இரண்டாம் காலாண்டு ஆலோசனைக்கூட்டம் பேரூராட்சித் தலைவர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் தலைவா் ஆா்.கே.செந்தில், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலா் ஸ்ரீ ரவிக்குமார், காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமுக பணியாளர் கார்த்திகைராஜன், வருவாய் ஆய்வாளர் சிவராமகுமார், சுகாதார ஆய்வாளர் கருப்பையா, கிராம சுகாதார நிலைய செவிலியர் ராமதிலகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகள் சாதனா, ஜீனா கபீசா, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முனீஸ்வரி, சரஸ்வதி, சங்கரேஸ்வரன், தொண்டுநிறுவன பிரதிநிதி எஸ்.பி.எம்.அழகர்சாமி, நேரு யுவ கேந்திரா இளைஞர் நல குழு பிரதிநிதி அருண்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்சி திட்ட பிரதிநிதி பிச்சையம்மாள், சைல்டு லைன் பிரதிநிதி பொருட்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குழந்தைகளின் திருமணங்கள், குழந்தைகள் தத்தெடுக்கும் முறை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக்குதல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், இளம் வயது குழந்தை திருமணம் தடுத்தல், கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெறும் முறை மற்றும் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றம் குறித்த விழிப்புணர்வு மாதந்தோறும் நடத்துவது, பேரூராட்சி அலுவலகம் மற்றும் பள்ளி வளாகத்தில் குழந்தை திருமண தடுப்பு குறித்து சுவர் விளம்பரம் செய்வது, காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 18 வயது உட்பட குழந்தைகளுக்கு கல்வி கற்க வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News