காரியாபட்டி மண்ணின் பெருமை - நூல் ஆசிரியருக்கு பாராட்டு விழா

Kariyapatti mannin perumai book author felicitated - இந்த நூல் தமிழக அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறை சிறந்த நூலாக தேர்ந்தெடுக் கப்பட்டு பரதனுக்கு சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டது.

Update: 2022-07-22 12:22 GMT

காரியாபட்டி மண்ணின் பெருமை - நூல் ஆசிரியருக்கு பாராட்டு விழா

காரியாபட்டி மண்ணின் பெருமை என்ற நூல் எழுதிய நூலாசிரியர் பரதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புள்ளியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பரதன் காரியாபட்டி மண்ணின் பெருமை என்ற நூலை எழுதினார். இந்த நூல் தமிழக அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறை சிறந்த நூலாக தேர்ந்தெடுக் கப்பட்டு பரதனுக்கு சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற நூலாசிரியர் பரதனுக்கு, விருதுநகர் மாவட்ட புள்ளியல் துறை சார்பாக பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட துணை இயக்குநர் சங்கரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், நெல்லை மண்டல இணை இயக்குனர் ஹரிகரதாஸ் பரதனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

துணை இயக்குனர்கள் சத்தியநாராயணன் (நெல்லை) ஜெய்சந்திரன் (ராமநாதபுரம்) ஜவஹர் பாரூக் (தூத்துக்குடி) கோம'துரைப்பாண்டியன்(கன்னியா குமரி) மற்றும் உதவி இயக்குனர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News