காரியாபட்டி அருள்மிகு பாலகிருஷ்ண சுவாமி ஆலய விழா!
காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டியில் பாலகிருஷ்ணன் சுவாமி 144 வது ஆண்டு உற்சவம் நடைபெற்றது.
காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டியில் பாலகிருஷ்ணன் சுவாமி 144 வது ஆண்டு உற்சவம்:
காரியாபட்டி அக்.16 .
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புதுப்பட்டியில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ.பாலகிருஷ்ணன் சுவாமி கோவில் 144-வது ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக முத்தாலம்மனுக்கு மஞ்சள் பால் அபிஷேகத்துடன் விழா தொடங்கப்பட்டது.
2. வது நாள் சக்தி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் பொங்கல் வைபவம் நடந்தது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக பாலகிருஷ்ணன் சுவாமி மற்றும் இதர தெய்வங்களை தேர்பவனியாக ஊர்வலமாக சென்று வீர வந்தம்மன் கோவிலில் வந்தடைந்தும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்திருந்தனர்.