காரியாபட்டியில் இப்தார் விருந்து
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது;
காரியாபட்டி பாண்டியன் நகர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் பள்ளிவாசலில், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டியன் நகரில் அமைந்துள்ள மஜ்ஜித் நூர் ஜும்மா பள்ளிவாசல், ஜமாத் சார்பாக இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், துணைத் தலைவர் ரூபி சந்தோசம், கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக, இப்தார் நோன்பு விருந்துக்கு வருகை தந்தவர்களை ஜமாத் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.