காரியாபட்டி ஒன்றியத்தில் மதிமுக சார்பில் கொடியேற்று விழா
காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம், நாங்கூர் கிராமத்தில் மதி.மு.க சார்பாக கொடி ஏற்று விழா நடந்தது
29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அக்கட்சி சார்பில் கொடியேற்றி வைக்கப்படுகிறது.
அதன்படி, காரியாபட்டி ஒன்றியத்தில் ம.தி.முக சார்பாக கொடி ஏற்று விழா நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம், நாங்கூர் கிராமத்தில் மதி.மு.க சார்பாக கொடி ஏற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஒன்றியச்செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். காரியாபட்டி நகரச் செயலாளர் மிசா சாமிக்கண்ணு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்டச் செயலாளர் கண்ணன், கட்சிக் கொடி ஏற்றி வைத்து பேசினார்.மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அமிர்தராஜ், அவைத்தலைவர் மணியப்பன், பொருளாளர் தங்கவேல், ஒன்றிச் செயலாளர்கள் அருப்புக்கோட்டை சீனிவாசன், திருச்சுழி மதன், நரிக்குடி துரை கர்ணன், சாத்தூர் சேதுபதி, காரியாபட்டி அவைத் தலைவர் ராக்கப்பன், பிரதிநிதிகள் காராளம், காளிமுத்து, கோபாலகிருஷ்ணன், முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஒன்றியச் செயலாளா முனியாண்டி, இளைஞர் அணிச் செயலாளர் மார்க்கன்டேயன் ஆகியோர் செய்திருந்தனர்.