முடுக்கன்குளம் பகுதியில் நடைபெற்ற வயல்வெளிப் பள்ளி
பயிரில் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் நோய் தடுப்பு முறைகள் பற்றியும் நேரடியாக களத்திலேயே விளக்கம் அளிக்கப்பட்டது
விருதுநகர் அருகே முடுக்கன்குளம் பகுதியில் வயல் வெளிப் பள்ளி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சேவையூர் பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், முடுக்கன்குளம் பகுதியில், திருவிருந்தாள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வயல் வெளி பள்ளி நடைபெற்றது. தற்சமயம், கடலை மற்றும் வெங்காய பயிரில் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும், நோய் தடுப்பு முறைகள் பற்றியும் நேரடியாக களத்திலேயே விளக்கம் அளிக்கப்பட்டது. கடலை நெற்பயிரில் நில தயாரிப்பு முதல் அறுவடை பணி வரை மூன்று கட்டங்களாக இந்த வயல் வெளி பள்ளி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.