காரியாபட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை

காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியில் உள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர்களை எப்படி மீட்பது பற்றிய செயல் விளக்கமளித்தனர்

Update: 2023-09-15 06:45 GMT

காரியாபட்டியில் நடைபெற்ற தீயணைப்புத்துறையினரின் விழிப்புணர்வு முகாம்.

காரியாபட்டியில் தீயணைப்பு துறை சார்பாக ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்கள் முன்னிலை.ில் நடத்தப்பட்டது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவின்படி, காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி கிராமத்தில் உள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர்களை எப்படி மீட்பது, மூச்சுதிணறல் இருந்தால் எப்படி காப்பாற்றுவது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. காரியாபட்டி தீயணைப்பு

நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில்நிலைய அலுவலர் வீரர்கள் நா.சசிகுமார், கார்த்திக்,தங்க மருது, பாண்டியன்,வீ. பழனிக்குமார், க.சுரேஷ், கு.சந்தனராஜ், க.செல்வகுமார் ஆகியோர் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தீ பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி களில் தீயை அணைக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் தடுப்பு பற்றிய செயல் விளக்கங்களை அளித்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் செய்யும் பணிக்கு பாராட்டு வார்த்தைகள் பொருந்தாது என்றனர்.



Tags:    

Similar News