பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ க்கள் பொன்னுபாண்டியன், ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-09-01 06:45 GMT

பேரூராட்சியில், அடிப்படை வசதிகள் கோரி நடந்த ஆர்ப்பாட்டம்.

மம்சாபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர தலைவர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலையே உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை மம்சாபுரம் பேரூராட்சியில் செயல்படுத்த வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும், பேரூராட்சியில், தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க காலிப்பணி இடங்களில் உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுபாண்டியன், ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News