மறைந்த காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி
சென்னையில் மரணமடைந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதி உதவி 2022 பேட்ஜ் காவலர்கள் வழங்கினார்கள்;
சென்னையில் மரணமடைந்த காவலர் குடும்பத்தாருக்கு நிதி உதவி 2022 பேட்ஜ் காவலர்கள் வழங்கினார்கள்:
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கினறை சேர்ந்தவர் அருண். இவர் 2022 ஆண்டு காவலர் பேட்ஜில் தேர்வாகிசென்னை ஆயுதபடையில் பணியாற்றி கொண்டிருந்தார். கடந்த ஜீலை10 ந்தேதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். காவலர் அருண்மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கடுமையான தீவிர முயற்ச்சியால் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், காவலர் அருணின் திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கு பேரிடியாக அமைந்தது.கடன் சுமையால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதனை அறிந்த அவருடன் தேர்வான 2022 பேஜ் காவலர்கள் அருணின் குடும்பத்தை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என கருதினர். வாட்சப் குழு மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அவரது பேஜ் காவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு காவலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்ப ஆரம்பித்தனர்.
இதில், வசூல் செய்யப்பட்ட 7 லட்சத்து 13 ஆயிரம் 452 ரூபாய் அருணின் குடும்பத்தாரிடம் 2022 பேட்ஜ் காவலர்கள் வழங்கினார்கள. இவர்கள், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இவ்வளவு குறைந்த பணிகாலத்தில் இவ்வளவு பெரிய தொகை உடன்பணியாற்றும் காவலர்களுக்கு கொடுக்கபட்டதில்லை என, காவலர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கு முன்பு விபத்துக்குள்ளான மூன்று 2022 பேஜ் காவலர்களுக்கு நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.