காரியாபட்டி அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: அமைச்சர் தொடக்கம்

பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதல் பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்;

Update: 2023-04-15 08:15 GMT

காரியாபட்டி அருகே புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை  அமைச்சர் தென்னரசு  தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புதிய வழத்தடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், பனிக்குரிப்பு கிராமத்திலிருந்து, காரியாபட்டிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதல் பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில், காலை மாலை இரண்டு வேளை பஸ் வசதி செய்து கொடுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில், புதிய வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய வழித்தடம் துவக்க விழாவில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கற்று  புதிய  பேருந்தை  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ,அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வார்த்தக பிரிவு மேலாளர் ஒன்றியச் செயலாளர் கண்ணன், பேரூராட்சியின் தலைவர் செந்தில், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, புதுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெய்கணேஷ், ஒன்றிய கழக துணைச்செயலாளர் குருசாமி, தி.மு.க பிரமுகர் சின்ன போஸ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News