உண்டு உறைவிடப் பள்ளியின் கல்வி மேலாண்மைக் கூட்டம்

Update: 2022-03-29 08:15 GMT

விருதுநகர் அருகே அ.முக்குளம் உண்டு உறைவிடப்பள்ளி கல்வி மேலாண்மைக்குழு கூட்டம்:

அ.முக்குளம் உண்டு உறைவிடப்பள்ளி கல்வி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ.முக்குளம் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளியில் கல்வி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம் நடைபெற்றது. சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார். கூட்டத்தில், உண்டு உறைவிடப்பள்ளி செயல்பாடுகள் குறித்தும் , பள்ளியில் வரும் கல்வி ஆண்டில் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை மாணவிகள் தங்கி படிக்க நிர்வாகம். நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், தலைமை ஆசிரியர் மகாதேவி, கல்வி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க | நிர்வாகிகள் பங்கேற்றனர்.உதவி ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News