விருதுநகர், காரியாபட்டி அருகே கல்லூரியில் இரத்த தான முகாம்..!
காரியாபட்டியில் இன்று இரத்ததான முகாம் மற்றும் பள்ளி விளையாட்டுவிழா போன்ற முக்கிய நிகழ்வுகள் நடந்தன.;
காரியாபட்டி சி.இ.ஓ.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம் நடந்தது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். :
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்ள இரத்தம் வங்கிகளில் இரத்த தட்டுப்பாடு அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு சிகிச்சைகளுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், விபத்தில் காயம் அடைந்தோர், போன்றவர்களுக்கு இரத்தம் அதிகம் தேவைப்பட்டதால் மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சி.இ.ஓ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் சந்தோஷ், அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் அண்ணாதுரை, கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் இந்த இரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்த சிறப்பு ரத்ததான முகாமில், கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர். அவர்களுக்கு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளி விளையாட்டு விழா:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 37-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் கீதா தலைமை வகித்தார். முதல்வர் இமாகுலேட் முன்னிலை வகித்தார்.
மாவட்ட விளையாட்டுதுறை கண்காணிப்பாளர் ஜாகீர் உசேன், விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். ஒலிம்பிக் தீபத்தை மாணவர்கள் ஏற்றிவைத்தனர். அதன்பிறகு, மாணவர்களின் பல்வேறு விதமான கலை மற்றும் தனித்திறன் விளையாட்டு போட்டிகளான கராத்தே, சிலம்பம் பிரமிட் வடிவமைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பரிசுகள் வழங்கினார். காவல்துறை சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் உதவி தலைமை ஆசிரியர் கயல்விழி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.