காரியாபட்டியில் கலையரங்கம் திறப்பு விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.;
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொன்னுத்தம்பி, புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, சீகனேந்தல் கிராமத்தில், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொன்னுத்தம்பி கலந்து கொண்டு, புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், துணைத்தலைவர் ரூபி சந்தோசம் ஒன்றியக் கவுன்சிலர்கள் சேகர், சிதம்பர பாரதி, ஆவியூர் சிலம்பரசன், அம்மையப்பன், சேது உட்பட பலர் பங்கேற்றனர்.