காரியாபட்டியில், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம்!
காரியாபட்டியில், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது.
காரியாபட்டியில் அதிமுக இளைஞர் - இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அதிமுக சார்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக்
கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்திராஜ். தோப்பூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாஸ்கரன் கலந்து கொண்டு பூத் கமிட்டி படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத்தமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. . மணிமேகலை, ஒன்றிய செயலாளர்கள் அம்மன் பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன் முனியாண்டி காரியாபட்டி நகரச் செயலாளர் விஜயன், திருச்சுழி நகரச் செயலாளர் ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியம், பாலமுருகன், தோப்பூர் ரகு, இளைஞர் பாசறை செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.