சேது பொறியியல் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்ககக் கூட்டம் நடைபெற்றது
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில், 1995 முதல் 2018 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் .முகமது ஜலீல் தலைமை வகித்தார்.
கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ். எம் .சீனி முகைதீன், எஸ் .எம். சீனி முகமது அலி யார், எஸ்.எம். நிலோபர் பாத்திமா ,எஸ் .எம். நாஸியா பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் சிவக்குமார், கல்வி ஆலோசகர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில், முன்னாள் சங்க மாணவர்களுக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் சங்க இணைய வழித்தடத்தை கல்லூரி முதன்மை அலுவலர் சீனி முகைதீன் துவக்கி வைத்தார். சங்கத்தின் முன்னாள் மாணவியும் தற்போதைய கணினி துறை பேராசிரியர் முனைவர் பார்வதி தலைவராகவும், துணைத் தலைவராக வெங்கடசேஷன், செயலாளர்களாக அகமது ஷெரிப், ஹரிஹர பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், 1995 ஆம் ஆண்டு முதல் படித்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . விழா ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் பார்வதி, முகமது ஷெரீப், மலைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.