மழையினால் பாதித்த நரிக்குறவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்

கனமழையினால், நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டனர்

Update: 2021-11-01 09:15 GMT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவரின மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அதிமுக வினர்

நரிக்குறவர்களுக்கு  அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், நரிக்குறவர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால், நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு தேவையான அரிசி, பலசரக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு பொருட்கள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பழனி வழங்கினார். இதில், அதிமுக நகர துணைச்செயலாளர் அழகர்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பெரியசாமி, பாண்டி, அழகர் இளைஞர் பாசறை செயலாளர் இராஜேந்திரன் பூக்கடை கணேசன், குருசாமி, கண்ணன் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News