காரியாபட்டி அருகே விவசாய நில பதிவில் முறைகேடு: கிராம மக்கள் புகார்

காரியாபட்டி அருகே விவசாய நில பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாரளித்தனர்.;

Update: 2022-05-30 08:42 GMT

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்தது மாங்குளம் ஊராட்சி. இதே ஊரை சேர்ந்த மொச்சிபத்தி, பூலாபத்தி ஆகிய பகுதிகளில் கடந்த 5 தலைமுறைகளுக்கும் சுமார் 379 / பரப்பளவு உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கண்ட நிலத்திற்குரிய, பட்டாவை பெற்று நிலவரியும் செலுத்தி வருகின்றனர்.

இந்த இடத்தை கடந்த 2009 ஆண்டு தனிநபர் ஒருவர் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்துள்ளார். இதை எதிர்த்து, விவசாயிகள் போராடியதால் 2012ம் ஆண்டு அந்த பதிவு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்த நபர் நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்று, மாவட்ட பதிவாளர், காரியாபட்டி பதிவாளர் அலுவலக உதவியுடன் 5-7-2021ந் தேதியன்று விவசாய மற்றும் அரசு நிலத்தையும் சேர்த்து சம்பந்தபட்ட நபர் தனது மனைவி பெயரில் பத்திரம் பதிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், விருதுநகர் மாவட்ட விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் , காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News