மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

குடும்பத் தகராறில் கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-22 03:01 GMT

திருவண்ணாமலை தாமரை நகர் பத்தாவது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெருமாள் இவரது மனைவி ஆதிலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அமெரிக்காவிலும் இரண்டாவது மகன் சிவசங்கர் சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகவும் உள்ளனர்.

ஆதிலட்சுமியின் மகன் சிவசங்கருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சத்யா என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது சத்யா தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்துள்ளார்.

திருமணம் முடிந்த பின்னர் தனி குடித்தனம் நம் செல்ல வேண்டும் என்று சத்யா கூறிவந்ததால் சத்யாவிற்கும் மாமியார் ஆதி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். மாமியார் ஆதிலட்சுமி தனி குடித்தனம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும் ஆதி லட்சுமிக்கும் சத்யாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெறு வந்துள்ளது.

இது குறித்து சத்யா சென்னை கொரட்டூரில் உள்ள தனது அண்ணன் பிரபுவிடம் கூறியுள்ளாராம். இதையடுத்து சத்யாவின் அண்ணன் பிரபு திருவண்ணாமலை சமுத்திரம் காலனியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ், சரண் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன், துராபாலி தெருவை சேர்ந்த முகமது அலி ஆகியோர் கொண்ட கூலிப்படை வைத்து கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி ஆதிலட்சுமியை தாக்கியதில் ஆதிலட்சுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாமியாரை  கூலிப்படை வைத்து கொலை செய்ததாக மருமகள் சத்யா மற்றும் அவரது அண்ணன் பிரபு, கூலி படையை சேர்ந்த நாலு பேர் என்ன ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், இந்த வழக்கில் ஆதிலட்சுமியை கூலிப்படை வைத்து திட்டம் தீட்டி கொலை செய்த பிரபு மற்றும் ஆனஸ்ட்ராஜ், சரண்ராஜ், பத்ரி நாராயணன், முகமது அலி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூபாய் மூன்று ஆயிரம் அபராதமும், உயிரிழந்த ஆதிலட்சுமியின் மருமகள் சத்யாவிற்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பினை வழங்கினார். இதனை அடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News