விடுதி மாணவி தற்கொலை: விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதம் மாறச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் அரியலூர் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதம் மாறச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் அரியலூர் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி வகுப்பு சென்று வந்துள்ளார்.
இம்மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 482 மதிப்பெண் பெற்ற மாணவி படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார்.
மாணவியின் குடும்ப வறுமையை பயன்படுத்திக்கொண்ட பள்ளி நிர்வாகம், மதம் மாறக் கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிக்க விடாமல் மாணவியை பள்ளியை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி மயக்க மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தில் போலீசார் பள்ளியின் விடுதியின் காப்பாளர் சகாயமேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மாணவியின் மரணத்திற்கு காரணமான கிறிஸ்துவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தனது மகளின் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அவரது தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதாவது இறந்த மாணவியின் உடலை இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்யத் தேவையில்லை. உடலை மனுதாரர் பெற்றுக்கொண்டு அவர்களின் வழக்கப்படி அடக்கம் செய்யவேண்டும். மாணவியின் பெற்றோர் மாஜிஸ்திரேட் முன்பு நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
விசாரணை அறிக்கையை பரிசீலிக்கப்பட்ட கவரில் வைத்து 24ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.