ஜோலார்பேட்டையில் கர்நாடகாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

Update: 2021-05-30 15:06 GMT

ஜோலார்பேட்டையில் கர்நாடகாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது

வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் மது பாட்டில்கள் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில்  இனஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 5 வது பிளாட்பாரத்தில் சந்தேகத்தில் பேரில் நின்று கொண்டிருந்ததிருப்பத்துாரை சேர்ந்த செல்வமணி (60), கார்த்திக்(20), கேபிரியல் ராஜ்கபூர் (23), அமலாவிஜய் (23) மற்றும்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் (38),  ராணிப்பேட்டை சேர்ந்த பிரபு (33) ஆகிய  6 பேரை பிடித்து விசாரணை செய்ததில், இவர்கள் பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் சங்கமித்ரா, லால்பாக், காக்கிநாடா மற்றும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர், அதேபோல் சோளிங்கர் பகுதியை சேர்ந்த பாபு (45 வயது), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், வேல்முருகன் ஆகிய மூவர் கைது  கைது செய்தனர் அவர்களிடம் இருந்து மொத்தமாக கடத்திவரப்பட்ட 2000 மது பாட்டில்களை ரயில்வே  போலீசார் பறிமுதல் செய்து திருப்பத்துார் மது அமலாக்க துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News