திருச்சியில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

திருச்சி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2021-05-28 13:30 GMT

திருச்சியில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் சுகாதார துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .அருகில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News