திருவையாறில் முன் விரோதம் காரணமாக பூ வியாபாரி கொலை

திருவையாறு அருகே பூ வியாபாரி முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.;

Update: 2021-05-24 13:30 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த ஈச்சங்குடியை சேர்ந்தவர் பாலன்,50, அதை பகுதியை சேர்ந்த சந்திரகாசன் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் பணம் கொடுக்கல்,வாங்கல் விவகாரத்தில் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் கடந்த 2019ம் ஆண்டு, பாலன்சந்திரனை வெட்ட முயன்ற நிலையில், அவரது கட்டை விரல் வெட்டுப்பட்டு படுகாயமடைந்தார்.

இதையடுத்து சந்திரகாசன் கொடுத்த புகாரில், பாலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் பாலன் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து பூ வியாபாரம் செய்து வந்தார். வழக்கம் போல, பூ வியாபாரத்தை முடித்து, நேற்று முன்தினம் மாலை பாலன் வீடு திரும்பாத நிலையில், அவரது மகன் பாபு கபிஸ்தலம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் பாலனை தேடி வந்தனர். இந்நிலையில், திருவையாறு அடுத்த சிறுபுலியூர் கிராமத்தில், விஜயகுமார் என்பவரின் எள்ளு வயலில், ஒருவர் தலையில் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக, அப்பகுதியில் ஆடு மேயத்தவர்கள், திருவையாறு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு சென்ற, எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவையாறு டி.எஸ்.பி., சித்தரவேல், இறந்தவரின் உடலை கைபற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில், இறந்தது பாலன் என்பதை உறுதி செய்தனர். மேலும், விரல் வெட்டுப்பட்ட சந்திரகாசன் மகன் ராஜதுரை,32, தந்தையின் விரலை வெட்டிய பாலனை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு, அவரது நண்பர்களான வினோத் மற்றும் ராஜ் ஆகிய மூவரும், நேற்றுமுன்தினம் மாலை, பாலனை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News