திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் கைது

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-22 14:00 GMT

திருவையாறு அடுத்த அரசூர் முருகன் கோவில் அருகில் பைக்கில் நின்று கொண்டிருந்த வரை திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

அவரை ஆய்வு செய்தபோது அரசு அனுமதியின்றி 20 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் அவர் தஞ்சாவூர் தொல்காப்பியம் சதுக்கம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருவதாகவும்,

புது பஸ் ஸ்டாண்ட் நட்சத்திர நகரில் வசித்து வரும் கலியமூர்த்தி மகன் வெங்கடேசன் (47) என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரை விசாரித்ததில் தனது வீட்டில் பாட்டில்கள் வைத்திருந்ததாக கூறியதன் பேரில் அவரது வீட்டை பரிசோதனை செய்தனர்.

அங்கு 327 பாட்டில்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆக மொத்தம் 347 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, அவர் விற்பனை செய்து கையில் வைத்து இருந்த ரூ 650  பணம் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்து நடுக்காவேரி ஸ்டேஷன் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News