புனல்வாசல் கிராமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை அருகே, புனல்வாசல் கிராமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-12-16 13:45 GMT

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வீடு வீடாக சென்று, பொதுமக்களிடம் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள புனல்வாசல் கிராமத்தில் அமைந்துள்ளது புனித சவேரியார் ஆலயம். இந்த ஆலயத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா இசை பாடல்களுடன் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பங்குத்தந்தை ஜான் எட்வர்ட் தலைமையில்,  50க்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புனல்வாசல் கிராமத்திலுள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி,  பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி அதை தவிர்க்க பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.

இதேபோல, இந்தப் பங்குத் தந்தையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பூவானம் கிராமத்தில்,  400க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துணிப்பைகளை வழங்கி,  பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி துணிப்பைகளை வழங்கினர்.

Tags:    

Similar News