உலக போலியோ தினம்: பட்டுக்கோட்டையில் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு

போலியோ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்;

Update: 2021-10-24 22:45 GMT

உலக போலியோ நாளையொட்டி பட்டுக்கோட்டையில் நடந்த ஸ்கேட்டிங்  விழிப்புணர்வு பேரணி

உலக போலியோ தினத்தை முன்னிட்டு, பட்டுக்கோட்டையில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இன்று உலக போலியோ தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்கேட்டிங் பேரணி மணிகூண்டு, பெரிய கடைத்தெரு என முக்கிய வீதிகள் வழியாக சென்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதையொட்டி, போலியோ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News