பட்டுக்கோட்டை அருகே நடவு செய்த போது இடி தாக்கி பெண் உயிரிழப்பு- 2 பேர் காயம்

பயங்கர சப்தத்துடன் இடி மின்னல் அடித்ததில், மங்களம் மற்றும் லதா, புதுமை நாயகி ஆகியோரை தாக்கியது.;

Update: 2021-10-17 15:30 GMT

பைல் படம்.

நடவு பணியின் போது இடி தாக்கி பெண் உயிரிழந்தார் படுகாயம் அடைந்த மேலும் இரு பெண்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயக் கூலி .இவரது மனைவி மங்களம்(45) . இவரும் அதே பகுதியைச் சேர்ந்த லதா மற்றும் புதுமை நாயகி உள்ளிட்ட 20 பெண்கள் நடவு பணிக்காக  ஆலடிக்குமுளை கிராமத்தில் தஞ்சை சாலை அருகில் உள்ள வயலுக்கு சென்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் இவர்கள் நடவு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது திடீரென பலத்த மழை பெய்தது. பின்னர் பயங்கர சப்தத்துடன் இடி மின்னல்  அடித்ததில், மங்களம் மற்றும் லதா, புதுமை நாயகி ஆகியோரை தாக்கியது.  இதில் மங்களம் சம்பவ இடத்திலேயே இறந்தார். லதா மற்றும் புதுமை நாயகி ஆகியோர் காயமடைந்த நிலையில்,  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டுக்கோட்டை பகுதியில் ஒரே நேரத்தில் இடி தாக்கியதில் மூன்று பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News