பட்டுக்கோட்டையில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை
தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை கடல் பகுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், கட்டுமரங்கள் மற்றும் நாட்டு படகுகள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், கடலில் அதிவேக காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் இருந்ததால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.