தஞ்சாவூர் அருகே குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் : 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் ஊரடங்கிலும் கடையைத் திறந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சீல் வைத்து உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். .;

Update: 2021-06-01 09:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தடையை மீறி கடையை திறந்து குட்கா விற்னை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் காவல்துறை ஆய்வாளர் ஜவகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணிக்கூண்டு அருகில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கடையை திறந்து வைத்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கடையில் பதுக்கி வைத்திருந்த நான்கு மூட்டை குட்கா, ஹான்ஸ் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் உட்பட மூவரை கைது செய்தனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News