அதிராம்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா
அதிராம்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.;
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோயில் திருவிழா, கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று 15 வது நாள் திருவிழாவாக தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் தீயில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வின் முன்னதாக மன்னப்பன் குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நடந்து வந்தனர்.