திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்காக வரும் 8 ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது;
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தஞ்சை மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்காக வரும் 8ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல்: தஞ்சை மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்க வரும் 8ம் தேதி அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருநங்கைகள் தங்களது ஆதார் அட்டை, இருப்பிடத்திற்கான ஏதேனும் ஒரு ஆதாரம், புகைப்படம் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் 8ம் தேதி அன்று நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம்.